rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Sunday, July 7, 2013

சந்தேகம்...!!!

எங்கள் காதலின் ஆழத்தை மிக

நிதானமாக உண்மையாக அதேசமயம் அழகாக 


சந்தேகித்துவிட்டு நிம்மதியாய் உறங்குகிறாள் அவள் 

நிம்மதியற்று காலப்பெருவெளியில் பயணிக்கிறேன் நான்..!!!!

Monday, July 1, 2013

கர்வம்

கர்வம் அழகியலில் சேராது என்று

நினைத்ததுக் கொண்டிருந்த நான்

உன் கர்வத்தின் அழகில் சற்று

மயங்கித்தான் போனேன்..!!!

Saturday, December 10, 2011

பாரதி!!!



பாரதி, தமிழ் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். அவரின் கவிதைகள் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை என்றாலும், கீழ் வரும் கவிதை என்னை உருமாற்றிக்கொள்ள உதவிய ஒன்று. அவரின் 129ஆம் பிறந்தநாள் ஆன இன்று இந்த கவிதையின் மூலம் அவரை நினைவு கூர்வோம்.


" தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? "
- மகாகவி சுப்ரமணிய பாரதி

இந்த கவிதையை ரணம் சுகம் என்ற புக்கிசையில் மிகவும் அழகாக இசை அமைத்து உள்ளனர். அதற்கான லிங்க் கீழே,


Tuesday, June 28, 2011

சுதந்திரம்!!!



சுதந்திரமான காற்று என்னைத்தாண்டி செல்கிறது


தன் கனவுகளை என் மூலம்
நிறைவேற்றிக்கொள்ளும் அப்பா

அனைவரையும் போல நடந்துகொள்ள அடிக்கடி
அறிவுறுத்தும் அம்மா

தன்னுடைய கொண்டாட்டங்களில் அனுமதியின்றி
ஈடுபடுத்தும் நண்பர்கள்

தனக்கு பிடித்தவாறு நடந்துகொள்ள என்னை
மாற்றும் தோழி.


சுதந்திரமான காற்று என்னைத்தாண்டி செல்கிறது
என்னால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது!!!

Tuesday, June 21, 2011

நினைவுகள்...



முடிந்துவிட்டதாக நீ கூறிய நம்

காதலில் இன்னும் நீள்கிறது அதன்

நினைவுகள்...

Monday, June 20, 2011

ராஜா வந்திருக்கிறார்..!!!



எங்கள் வீட்டுக்கு ஒரு நாய் வந்துள்ளது..

அப்பாவுக்கு அவன் இறந்து போன
முன்னோர்கள்

அம்மாவுக்கு அவன் குடும்பத்தில் ஒரு
உறுப்பினர்

பாட்டிக்கு அவன் மனதின் தனிமையை
நிரப்புக்கின்றவன்

எனக்கு அவன் கவலைகளை மறக்கடிக்கும்
விளையாட்டுத்தோழன்

உறவினர்களுக்கு அவன் எங்கள் வீட்டின்
ஆச்சரியம்

தெரு நாய்களுக்கு அவன் வரம்
பெற்றவன்

எங்கள் வீட்டுக்கு ஒரு நாய் வந்துள்ளது.!!!




P.S.- ராஜா வந்திருக்கிறார்,இது கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் ஒன்று. எனக்கு இது இருக்கே! உனக்கு இருக்கா! என்று பேசிக்கொள்ளும் சிறுவர்களின் உலகம் பற்றியது. அதை போலவே இந்த கிறுக்களும் அமைந்துள்ளத்தால் இந்த தலைப்பு.

Monday, June 6, 2011

தொடுகை..!!


கன்னத்தில் விழும் முதல் மழைத்துளி

மாலை நேர குளிர் காற்று

காலையில் சூரியனின் வெப்பம்- போன்றது

அவள் ஸ்பரிசத்தின் முதல் தொடுகை....