twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, April 7, 2011

குழப்பம்-வெற்றி-தோல்வி!!


அழுகையிலும் சிரிக்கிறேன்
சிரிப்பில் அழுகிறேன்

மௌனத்திலும் பேசினேன்
பேச்சிலும் மௌனமானேன்

உறங்காமல் விழித்திருந்தேன்
விழித்திருந்தும் உறங்கினேன்

கோபத்திலும் சாந்தமானேன்
சாந்தத்திலும் கோபமானேன்..!!






இது ஒரு சோதனை முயற்சி... முழுமையாக படித்தால் ஒரு தலை காதலில் உள்ள ஒரு இதயத்தின் குழப்பம்.. ஒவ்வொரு பத்தியிலும் உள்ள முதல் வரிகளை மட்டும் கோர்த்து படித்தால், காதலில் வெற்றி பெற்ற இதயத்தின் நிலை, இரண்டாவது வரிகளை கோர்த்தால் காதலில் தோல்வியுற்ற இதயத்தின் நிலை...

தேடல்!!


உன்னோட உலக ஞான தேடலுக்கு

கூகுள் போதாது -அவள்

உன்னிடம் நான் கொண்ட தேடலுக்கு

கண்கள் போதாது -அவன்

ஏன்??-2


சிலப்பதிகாரத்தை படித்துவிட்டு


கண்ணகியை கற்புக்கரசி
என்ற சமூகம்

பாண்டியனை நீதிதவறாதவன்
என்ற சமூகம்

மாதவியை ஒழுக்கமற்றவள்
என்ற சமூகம்

கோவலனை சபலம்கொண்டவன்
எனக் கூறாதது

ஏன்??

Tuesday, April 5, 2011

ஏன்..?!



சிறு பெருமை

சிறு கர்வம்

சிறு பொய்மை

சிறு அழகியல்

சிறு அமைதி

சிறு ஆர்ப்பாட்டம்

இவைகளை கொடுத்த உன்

காதல்- பிரிவில் மட்டும்

பெரிய பிரளயத்தை கொடுப்பது

ஏன்..?!

Monday, April 4, 2011

தடுமாற்றம்!!



உன் கைகளில் புதைந்து

விரல்களோடு பிணையும் பொழுது

உள்ளங்கை தரும் வெப்பத்தினால்

தடுமாறுவது


என் விரல்கள் மட்டுமல்ல


உன்னோடு கொண்ட காதலில்


பொதிந்துள்ள காமமும் தான்!!!

தேர்தல்..!!



இல்லைகள் குறையும்

இலவசங்கள் பெருகும்

ஆளும்கட்சி!!


இல்லைகள் இல்லை

ஊழல்கள் இல்லை

எதிர்கட்சி!!


நல்லவனும் இல்லை

தலைவனும் இல்லை

வாக்காளர்கள்!!