twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, December 10, 2011

பாரதி!!!



பாரதி, தமிழ் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். அவரின் கவிதைகள் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை என்றாலும், கீழ் வரும் கவிதை என்னை உருமாற்றிக்கொள்ள உதவிய ஒன்று. அவரின் 129ஆம் பிறந்தநாள் ஆன இன்று இந்த கவிதையின் மூலம் அவரை நினைவு கூர்வோம்.


" தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? "
- மகாகவி சுப்ரமணிய பாரதி

இந்த கவிதையை ரணம் சுகம் என்ற புக்கிசையில் மிகவும் அழகாக இசை அமைத்து உள்ளனர். அதற்கான லிங்க் கீழே,


Tuesday, June 28, 2011

சுதந்திரம்!!!



சுதந்திரமான காற்று என்னைத்தாண்டி செல்கிறது


தன் கனவுகளை என் மூலம்
நிறைவேற்றிக்கொள்ளும் அப்பா

அனைவரையும் போல நடந்துகொள்ள அடிக்கடி
அறிவுறுத்தும் அம்மா

தன்னுடைய கொண்டாட்டங்களில் அனுமதியின்றி
ஈடுபடுத்தும் நண்பர்கள்

தனக்கு பிடித்தவாறு நடந்துகொள்ள என்னை
மாற்றும் தோழி.


சுதந்திரமான காற்று என்னைத்தாண்டி செல்கிறது
என்னால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது!!!

Tuesday, June 21, 2011

நினைவுகள்...



முடிந்துவிட்டதாக நீ கூறிய நம்

காதலில் இன்னும் நீள்கிறது அதன்

நினைவுகள்...

Monday, June 20, 2011

ராஜா வந்திருக்கிறார்..!!!



எங்கள் வீட்டுக்கு ஒரு நாய் வந்துள்ளது..

அப்பாவுக்கு அவன் இறந்து போன
முன்னோர்கள்

அம்மாவுக்கு அவன் குடும்பத்தில் ஒரு
உறுப்பினர்

பாட்டிக்கு அவன் மனதின் தனிமையை
நிரப்புக்கின்றவன்

எனக்கு அவன் கவலைகளை மறக்கடிக்கும்
விளையாட்டுத்தோழன்

உறவினர்களுக்கு அவன் எங்கள் வீட்டின்
ஆச்சரியம்

தெரு நாய்களுக்கு அவன் வரம்
பெற்றவன்

எங்கள் வீட்டுக்கு ஒரு நாய் வந்துள்ளது.!!!




P.S.- ராஜா வந்திருக்கிறார்,இது கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் ஒன்று. எனக்கு இது இருக்கே! உனக்கு இருக்கா! என்று பேசிக்கொள்ளும் சிறுவர்களின் உலகம் பற்றியது. அதை போலவே இந்த கிறுக்களும் அமைந்துள்ளத்தால் இந்த தலைப்பு.

Monday, June 6, 2011

தொடுகை..!!


கன்னத்தில் விழும் முதல் மழைத்துளி

மாலை நேர குளிர் காற்று

காலையில் சூரியனின் வெப்பம்- போன்றது

அவள் ஸ்பரிசத்தின் முதல் தொடுகை....

Thursday, May 12, 2011

காதல் தோல்விகள்..!!


ஒரு கவிதை எழுதி முடிக்கும்

முன்- கசக்கி எறியும் காகிதங்களை

போன்றது முந்தைய காதல் தோல்விகள்..!!

Thursday, April 7, 2011

குழப்பம்-வெற்றி-தோல்வி!!


அழுகையிலும் சிரிக்கிறேன்
சிரிப்பில் அழுகிறேன்

மௌனத்திலும் பேசினேன்
பேச்சிலும் மௌனமானேன்

உறங்காமல் விழித்திருந்தேன்
விழித்திருந்தும் உறங்கினேன்

கோபத்திலும் சாந்தமானேன்
சாந்தத்திலும் கோபமானேன்..!!






இது ஒரு சோதனை முயற்சி... முழுமையாக படித்தால் ஒரு தலை காதலில் உள்ள ஒரு இதயத்தின் குழப்பம்.. ஒவ்வொரு பத்தியிலும் உள்ள முதல் வரிகளை மட்டும் கோர்த்து படித்தால், காதலில் வெற்றி பெற்ற இதயத்தின் நிலை, இரண்டாவது வரிகளை கோர்த்தால் காதலில் தோல்வியுற்ற இதயத்தின் நிலை...

தேடல்!!


உன்னோட உலக ஞான தேடலுக்கு

கூகுள் போதாது -அவள்

உன்னிடம் நான் கொண்ட தேடலுக்கு

கண்கள் போதாது -அவன்

ஏன்??-2


சிலப்பதிகாரத்தை படித்துவிட்டு


கண்ணகியை கற்புக்கரசி
என்ற சமூகம்

பாண்டியனை நீதிதவறாதவன்
என்ற சமூகம்

மாதவியை ஒழுக்கமற்றவள்
என்ற சமூகம்

கோவலனை சபலம்கொண்டவன்
எனக் கூறாதது

ஏன்??

Tuesday, April 5, 2011

ஏன்..?!



சிறு பெருமை

சிறு கர்வம்

சிறு பொய்மை

சிறு அழகியல்

சிறு அமைதி

சிறு ஆர்ப்பாட்டம்

இவைகளை கொடுத்த உன்

காதல்- பிரிவில் மட்டும்

பெரிய பிரளயத்தை கொடுப்பது

ஏன்..?!

Monday, April 4, 2011

தடுமாற்றம்!!



உன் கைகளில் புதைந்து

விரல்களோடு பிணையும் பொழுது

உள்ளங்கை தரும் வெப்பத்தினால்

தடுமாறுவது


என் விரல்கள் மட்டுமல்ல


உன்னோடு கொண்ட காதலில்


பொதிந்துள்ள காமமும் தான்!!!

தேர்தல்..!!



இல்லைகள் குறையும்

இலவசங்கள் பெருகும்

ஆளும்கட்சி!!


இல்லைகள் இல்லை

ஊழல்கள் இல்லை

எதிர்கட்சி!!


நல்லவனும் இல்லை

தலைவனும் இல்லை

வாக்காளர்கள்!!

Tuesday, February 1, 2011

நீ!!!!


சுஜாதாவின் கதாபாத்திரங்களில் நீ!!

ரகுமானின் இசையில் நீ!!

வைரமுத்துவின் கவிதைகளில் நீ!!

எனக்கு பிடித்த எல்லாவற்றிலும் நீ!!

எனக்கு பிடித்த எல்லாமுமாய் நீ!!

என்னில் உன்னை விதைத்து

உன்னில் என்னை புதைத்து

காதலில் தொலைகின்றேன் நான்!!

Thursday, January 13, 2011

என் கிறுக்கல்கள்-6


கறை படிந்த சுவர்கள்

ஓசை எழுப்பும் காற்றாடிகள்

மூக்கை துருத்தும் கண்ணாடிகள்

மக்களை மதியா ஊழியன்கள்

கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைகள்

ஆகியவை

நம் தேசத்து அரசு அலுவலகங்களின்

அழிக்க முடியா அடையாளங்கள்…

என் கிறுக்கல்கள்-5

தன் சகமனிதனிடம் எதிர்பார்ப்புகள் இன்றி

அன்பும் நேசமும் கனிவும் கொள்ளும்

ஒருவனுக்கு தமிழ்கூறும் நல்லுலகம்

இட்ட பெயர் ‘இளிச்சவாயன்’

என் கிறுக்கல்கள்-4


பொறுக்கி,

ராஸ்கல்,

இடியட்

என்று என்னை திட்டும் போது

அவளின் அழகு இன்னும் கூடுகிறது

கூடவே என் காதலும்..!!!

ஞாபகம்


மின்னலை போன்ற உன் பார்வை

மழையை போன்ற உன் பேச்சு

தென்றலை போன்ற உன் குணம்

இவை அனைத்தையும் மறக்க துணிந்த
என் நெஞ்சம்

உன் காதலை மட்டும் மறக்க
துணியவில்லையடி…!!!

என் கிறுக்கல்கள்-3


என்னை நீயும்

உன்னை நானும்


மறக்கவும் வெறுக்கவும்


முயல்வதில் மட்டுமே


வெற்றி பெற்றிருக்கிறோம்..!!!

என் கிறுக்கல்கள்-2

என்னை ஆர தழுவி

என் மேலாடையை விலக்கி

ஊடாக புகுந்து சென்று

நுனிகளை எச்சிலால் ஈரமாக்கி

மேலும் கீழுமாய் புரட்டி
பார்த்தாயானால்

உனக்கு பல செய்திகள்
தருவேன்.

இப்படிக்கு புத்தகம்..!!!


என் கிறுக்கல்கள்-1



அன்பின் உச்சம் நட்பு

நட்பின் உச்சம் காதல்

காதலின் உச்சம் காமம்..!!!